"பாஜகவினர் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குகிறார்கள்"... கி.வீரமணி அதிரடி
"பாஜகவினர் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குகிறார்கள்"... கி.வீரமணி அதிரடி
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது காலணி வீசியது எதிர்பாராமல் நடந்த நிகழ்வல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவ வீரருக்கு அரசின் சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்த சென்றதாக கூறியுள்ளார். ஆனால், அமைச்சரைத் தடுத்து கார் மீது காலணி வீசியதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வல்ல என்ற அவர், பாஜகவினர் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். திராவிட மாடல் ஆட்சிக்கு தொல்லை கொடுக்க நினைத்தால், அவர்கள் குழியில் விழுவார்கள் என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.
Next Story