"கட்டுப்பாட்டை மீறி விநாயகர் ஊர்வலம் சென்ற பாஜக" - வேலூர் இப்ராஹிமை தடுத்து நிறுத்திய போலீஸ்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பாஜக சார்பில் மதநல்லினக்க விநாயகர் சதுர்த்தி விழாவில், கட்டுப்பாட்டை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற, சிறுபாண்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை, போலீசார் தடுத்து நிறுத்தினர். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்தின் அருகே இருந்து பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர். 100 மீட்டர் தாண்டி ஊர்வலமாக சென்றதால், வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், காவல்துறையினரின் கட்டுப்பாடுகளையும் மீறி, பாஜகவினர் 500 மீட்டர் வரை ஊர்வலமாக சென்று, வாணியானு அணையில் சிலையை கரைத்தனர்.
