கோவையில் வரும் 31 ஆம் தேதி பாஜக முழு கடையடைப்புக்கு அழைப்பு - கோவை மாநகர காவல்துறை அறிக்கை

x

கோவையில் வரும் 31 ஆம் தேதி பாஜக முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்த 27 காவலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் மேற்கொண்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, அமைதி நிலைநாட்டப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வரும் 31 ஆம் தேதி கோவையில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்