எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ரூ.20கோடிக்கு பேரம்.? அவசர ஆலோசனையில் அரவிந்த் கெஜ்ரிவால்
எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ரூ.20கோடிக்கு பேரம்.? அவசர ஆலோசனையில் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை தலா 20 கோடிக்கு பாஜக பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனது கட்சி எம்.ஏல்.ஏக்களுடன் கேஜ்ரிவால் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் தனக்கு முதல்வர் பதவி தருவதாக பாஜக தரப்பில் இருந்து குறுஞ்செய்தி வந்ததாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோதியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை தலா 20 கோடி ரூபாய்க்கு பாஜக பேரம் பேசுவதாக அடுத்த கட்ட புகார் எழுந்தது. இதனையெட்டி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் அவரது இல்லத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது . இவை தவிர அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் டெல்லியின் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.