பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

• பாஜகவின் இராமநாதபுரம் மாவட்ட புதிய தலைவராக தரணி முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட போகலூர் திமுக ஒன்றிய தலைவராக இருந்த EMT கதிரவன் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். • இதையடுத்து அவருக்கு பாஜகவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டது. • கடந்த ஒரு வருடமாக மாவட்ட பாஜக தலைவராக இருந்த கதிரவன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். • அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும், இதனால் பாஜகவினர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதாக கூறப்படும் தரணி முருகேசன் என்பவரை பாஜகவின் இராமநாதபுரம் மாவட்ட புதிய தலைவராக அண்ணாமலை நியமித்துள்ளார் .
X

Thanthi TV
www.thanthitv.com