காட்டெருமை தாக்கி முதியவர் உயிரிழப்பு - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவர்

x

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கியதில் முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கிளண்டேல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ சேகர்.

கடந்த 21-ஆம் தேதி, இவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த காட்டெருமை ஒன்று இவரை முட்டித் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்