பிரபல ரவுடியின் குழந்தைக்கு பிறந்த நாள் ஏற்பாடு - தடுத்து நிறுத்திய காவல் துறை

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடியின் குழந்தையின் பிறந்த நாள் விழா பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசாரால் நிறுத்தப்பட்டது.

நடுவீரப்பட்டு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி லெனின், தனது ஆண் குழந்தைக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா நடத்துவதற்காக, பிரம்மாண்ட மேடை அமைத்ததோடு, ஆயிரம் பேருக்கு பிரியாணி சமைத்து விழாவிற்கான முன்னேற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சென்ற போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்