"அதுக்குள்ள 25 வருஷம் ஆகிருச்சா"... ஆஸ்திரேலியாவை வச்சு செய்த சச்சின் - கேக் வெட்டி கொண்டாட்டம்..!

x

வருகிற 24ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், மும்பையில் ரசிகர்களுடன் கேக் வெட்டி மகிழ்ந்தார். கடந்த 1998ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சச்சின் 143 ரன்கள் விளாசினார். கிரிக்கெட் வரலாற்றில் Desert storm (டெசர்ட் ஸ்டோர்ம்) இன்னிங்ஸ் என கொண்டாடப்படும் இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சச்சின் பங்கேற்றார். அப்போது, ரசிகர்களுடன் சச்சின் கேக் வெட்டி கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்