பிறப்பு இறப்பு பதிவு சட்டம்..மத்திய அரசு புதிய முடிவு

x

பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தாலும், மாணவர் சேர்க்கை மற்றும் திருமண பதிவுகளில் பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 ஐ திருத்துவதற்கான வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு பொதுகளத்தில் வைக்கப்பட்ட வரைவு மசோதா குறித்து, மாநில அரசுகளிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.

பின்னர், மசோதாவை சட்டத்துறை ஆய்வு செய்த நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்