காவல்நிலையம் அருகே நடந்த சம்பவம் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

நாட்றம்பள்ளி காவல்நிலையம் அருகே நகைக்கடை முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சடலகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நாட்றம்பள்ளியில் உள்ள நகைக்கடைக்கு வந்திருந்த நிலையில், தனது பல்சர் பைக்கை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றார். இதனை நோட்டமிட்டபடி இருந்த மர்ம நபர், சரவணனின் வாகனத்தை லாவகமாக எடுத்துச் சென்றார். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்