பைக்கை திருட முயன்ற போதை ஆசாமி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

x

சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற போதை ஆசாமி, அதை திருட முடியாமல் சென்ற நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அம்பத்தூர் கருக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், அதிகாலையில் நுழைந்த போதை ஆசாமி ஒருவர் இருசக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளார். ஆனால் வாகனத்தை நகர்த்த முடியாமல் அவர் அவதிப்பட்ட நிலையில், வாகனம் கீழே சாய்ந்தது. மீண்டும், மீண்டும் முயன்ற அவரால் வாகனத்தை எடுத்து செல்ல முடியாததால், அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்