வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திருட்டு- பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

x

கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட, கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.

கோட்டைமேடு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடுபோனது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன உரிமையாளர், வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டுள்ளார்.

இதில், மர்ம நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்