கால்வாயில் கிடந்த பைக் - வீட்டின் பின்புறத்தில் கிடந்த உடல் - கேரளத்தை அதிர வைத்துள்ள நிஜ 'பாபநாசம்'

x

கேரள மாநிலம் ஆலுவாவில், பாபநாசம் திரைப்பட பாணியில், இளைஞரைக் கொன்று வீட்டினுள் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலுவா பகுதியை சேர்ந்த பிந்து குமார் என்பவர், கடந்த 26 ஆம் தேதி முதல் மாயமானதாக, அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து, போலீசாரும் இவரை தேடி வந்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையில், பிந்து குமாருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் ஒன்று, கொட்டாரக்கடவு பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

பிந்துகுமாரின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது, முத்துக்குமார் என்பவரிடம் அவர் கடைசியாக பேசியது தெரியவந்தது.

முத்துக்குமார் செல்போனை தொடர்புகொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டின் முன்புறத்தில் குழி ஒன்று தோண்டி இருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை தோண்டியபோது, பிந்துகுமாரின் உடல் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் முத்துக்குமாரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் என்ன? முத்துக்குமார்தான் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்