பைக் மீது மோதிய ஆட்டோ...காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை

x

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

ஓமந்தூரில் இருந்து குழந்தையுடன் 4 பேர் தின்டிவனத்தை நோக்கி சென்ற ஆட்டோ கிளியனூர் அருகே இருசக்கர வாகனம் மீது மோதியது.

அதில், ஆட்டோவில் சென்ற இருவருக்கும், இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேருக்கும் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்