உயிரை பறித்த அதிவேகம்... நேருக்கு நேர் மோதிய இரு சக்கர வாகனங்கள் - துடிதுடித்து பலியான இருவர்

x

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கூவத்தூர் அருகே சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானது. இதில், இப்ராகீம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அடையாளம் தெரியாத நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்