மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையீடு...பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு

x

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், பாட்னாவில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களுக்கு உதவாமல், அவர்கள் நாட்டை முன்னேற்றுவது குறித்து பேசுவது வியப்பாக உள்ளதாகவும், மாநிலங்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில்தான் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசின் நிதி கிடைக்காதபோது, மாநில அரசுகள் கடன் வாங்கியதாகவும், அதற்கும் தற்போது மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டி பேசினார். இதுபோன்ற மத்திய அரசின் தலையீட்டை, தாங்கள் ஒருபோதும் கண்டதில்லை எனவும் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்