தேசிய அரசியலில் மிகப்பெரிய திருப்பம்.. தேதி குறிப்பு.. தூக்கம் தொலைத்த பாஜக - அட இது கனவா? இல்ல நனவா?

x

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க போவது யார் ?

என்ற கேள்வி நீண்ட நாட்களாக தேசிய அரசியலில் தொடர்ந்து வந்தது.

சென்ற ஆண்டு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும்...

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராகவும்... பாஜக மற்றும் காங்கிரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி என்பதில் இவ்விருவரும் பிடிவாதம் காட்டி வந்தனர்.

ஆனால் தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணி பாஜகவிற்கு எதிராக பலன் அளிக்காது என்பதே அரசியல் விமர்சகர்கள் பலரது கூற்றாக இருந்து வந்தது.

இந்த நிலையில், சென்ற ஆண்டு பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டு, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்து, ஆட்சியை தொடர்ந்த பீகார் முதலமைச்சர்

நிதிஷ்குமார்... எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை கையில் எடுத்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் மம்தா பானர்ஜியுடனான அவரது சந்திப்பு, இதற்கு பலன் கொடுக்கும் விதமாக அமைந்தது.

முதலில் எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூன் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், 12ம் தேதி கூட்டத்தில் பங்கேற்பதில் சில தலைவர்களுக்கு ஏற்பட்ட அசெளகரித்தால் தலைவர்கள் அனைவரின் பங்கேற்பையும் உறுதி செய்யும் விதமாக ஜூன் 23ஆம் தேதிக்கு இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி, ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர்

அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்பட பலர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் தாம் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என முன்னதாகவே அறிவித்து விட்டார், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுக்கள் சிதறுவதை தவிர்க்கவும்... பாஜகவிற்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவதுமே நோக்கமாகக் கொண்டு இந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொண்டாலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 350 இடங்களுக்கு குறையாமல் போட்டியிடுவது என்பதில் அந்த கட்சி உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி, திரிணாமுல் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையை பகிர உள்ளது, காங்கிரஸ் கட்சி.

அதோடு, அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் சென்னையில் திமுக ஆதரவுடன் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து, கொல்கத்தா மற்றும் மும்பையிலும் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்