"புவனேஷ்வர் குமார் தான் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனை" - கவாஸ்கர் பேச்சால் பரபரப்பு

x

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ரன்களை வாரி வழங்கி வருவது இந்திய அணிக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் விதியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீர‌ர், இந்திய பவுலர்கள் சரியாக பந்துவீசவில்லை என விமர்சித்துள்ளார்.

மேலும், புவனேஷ்வர் தொடர்ந்து ரன்களை வாரி வழங்குவதாகவும், இது இந்திய அணியின் பெரிய பிரச்னையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்