பழையன கழிதலும், புதியன புகுதலும் - போகி பண்டிகையை கொண்டாடிய மக்கள்

x

சென்னை மாநகரம் முழுவதும், அதிகாலை முதலே போகி பண்டிகை களைகட்டியது.தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக, மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று, போகி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

குறிப்பாக சென்னை மாநகரில் அதிகாலையிலேயே எழுந்த பொதுமக்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.

சிறுவர்கள் தங்கள் வீட்டின் முன், மேளம் அடித்து, உற்சாகத்துடன் இந்த போகியை கொண்டாடி, பொங்கல் பண்டிகையை வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்