பாரத் ஜோடோ யாத்திரை - "ராகுலை பிரதமர் வேட்பாளராக்குவது..." - காங்கிரஸ் விளக்கம் | Congress

x

2024 தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கமல்ல என காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அரியானா சென்றது. கர்னலில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள், யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கானது அல்ல, இந்த நாட்டுக்கானது என்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசியபோது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது யாத்திரையின் நோக்கமல்ல என்றார். யாத்திரை தேர்லுக்கானது என கூறி சிறுமைப்படுத்த வேண்டாம் எனக் கூறிய ஜெய்ராம் ரமேஷ், பழிவாங்கும், வெறுப்பு மற்றும் அழிவு அரசியலை செய்துவரும் பிரதமர் மோடியால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ராகுல் காந்தி மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்