காயமடைந்ததால் உலகக்கோப்பையில் பங்கேற்காத பென்சிமா- பிரான்ஸ் அணிக்கு 37 கோல் அடித்தவர்

x

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரான்ஸ் நட்சத்திர வீரர் கரீம் பென்ஸிமா ஓய்வு பெற்றுள்ளார். காயம் காரணமாக நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் பென்ஸிமா பங்கேற்கவில்லை. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோற்ற நிலையில், கரீம் பென்ஸிமா ஓய்வை அறிவித்து உள்ளார். பிரான்ஸ் அணிக்காக 97 போட்டிகளில் ஆடியிருக்கும் பென்ஸிமா 37 கோல்கள் அடித்துள்ளார். சிறந்த வீரருக்கான பாலன் டி ஓர்(Ballon d'Or ) விருதையும் பென்ஸிமா வென்றுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்