காதலை ஏற்க மறுத்த 16 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு

x
  • கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்த 16 வயது சிறுமியின் முகத்தில் இளைஞர் ஆசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டம் குருபேட்டை பகுதியை சேர்ந்தவர் மெக்கானிக் சுமந்த். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததுள்ளார்.
  • இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியிடம் சுமந்த் காதலை தெரிவித்த நிலையில், ஏற்க மறுத்த சிறுமி காதலை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
  • இதனால், ஆத்திரமடைந்த சுமந்த், வாகனத்தை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை பெண்ணின் முகத்தில் வீசி தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதையடுத்து, பெண்ணை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பெண்ணின் இடது கண் நாற்பது சதவீதம் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தப்பியோடிய சுமந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்