கோபத்தை குறைக்கணுமா?.. இங்க வாங்க ஆத்திரம் தீரும் வரை அடித்து நொறுக்கலாம் - கூல் செய்யும் ரேஜ் ரூம்..!
பெங்களூருவில் கோபத்தை குறைக்கும் வகையில் ரேஜ் ரூம்மை சென்னை ஐஐடி மாணவி தொடங்கியுள்ளார்.
சென்னை ஐஐடியில் படித்த அனன்யா ஷெட்டி, பெங்களூரு பசவனகுடி பகுதியில் முதல் ரேஜ் ரூம்பை உருவாக்கியிருக்கிறார்.
தாங்க முடியாத கோபம் கொண்டவர்கள் இந்த அறைக்குள் பாதுகாப்பான உடை அணிந்து சென்று இருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்து மனதை தேற்றிக்கொள்ளலாம்.
பலரது சுயவாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்தபோது, வெளிநாடுகளில் இருக்கும் இந்த வசதியை இங்கும் கொண்டுவர முயற்சித்ததாக அனன்யா ஷெட்டி கூறியிருக்கிறார்.
இங்கு வருவோர் அதிகப்பட்சம் ஒரு மணி நேரம் வரையில் பொருட்களை உடைக்கலாம் எனவும் உடைக்கும் பொருட்களை பொறுத்து 90 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையில் கட்டணம் வசூல் செய்வதாகவும் தெரிவிக்கிறார்.
இதனை வேடிக்கையான நிகழ்வாக சிலர் வரவேற்றாலும், இது வாழ்க்கையை எதிர்க்கொள்ள மனதை பக்குவப்படுத்தாது, வாழ்க்கையில் அமைதியை குலைக்கவே செய்யும் என சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
