எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வங்கப்புலி கங்குலி... கிரிக்கெட்டின் "தாதா" - கொண்டாடும் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான கங்குலியின் பிறந்தநாள் இன்று... வங்கப்புலி, தாதா என ரசிகர்களால் கொண்டாடப்படும் கங்குலி, எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்... இந்திய அணியின் அணுகுமுறையை மாற்றி, வெளிநாடுகளிலும் வெற்றிக்கொடி ஏற்ற வைத்த பெருமை கங்குலியைச் சேரும். களத்தில் இருந்து இறங்கி வந்து, கங்குலி அடிக்கும் இமாலய சிக்சர்கள் தனித்துவம் வாய்ந்தவை... 51வது வயதில் அடியெடுத்து வைக்கும் கங்குலிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story
