ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட நன்மைகள்..? - மாநிலங்களின் நிலை என்ன..? - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்

x

ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாநில அரசுகளின் வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

ஜூன் மாத ஜி.எஸ்.டி வரி வசூல் 1.61 லட்சம் கோடி ரூபாயாக, கடந்த ஆண்டு ஜூன் அளவை விட 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

2017 ஜூலை ஒன்றில் ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப் பட்டது. தற்போது ஆறு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், இதானால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட் களின் மீதான வரிச் சுமை, இதன் மூலம் குறைக்கப் பட்டு, அதன் மூலம் மக்களுக்கு பெரும் நன்மை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

பாக்கெட் பால், டீ தூள், பால் பவுடர், சர்க்கரை, சமையல் எண்ணெய்கள், மசாலா பொருட்கள், 500 ரூபாய் வரை விலை கொண்ட காலணிகள் மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப் படுகிறது.

2017 ஜூலைக்கு முன்பு இவற்றின் மீது 6 முதல் 10 சதவீதம் வரை வரி விதிப்பு இருந்ததை சுட்டிக் காட்டியுள்ளார்.

தலைக்கு தேய்க்கும் எண்ணெய், பற்பசை, சோப்பு, வாசனை திரவியங்கள், டிடெர்ஜென்ட் சோப்புகள் மீதான வரிச் சுவை, 2017 ஜூலை வரை 28 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின், இவற்றின் மீதான வரிச் சுமை

18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கிரைண்டர், மிக்ஸி, பிரிஜ், வேக்கியும் கிளீனர், 27 இஞ்ச் தொலைகாட்சி பெட்டி மற்றும் வாசிங் மெசின்கள் மீதான வரி விதிப்பு, ஜி.எஸ்.டிக்கு முன்பு 31.5 சதவீதமாக இருந்து, தற்போது 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜி.டி.பி வளர்ச்சியின் அடிப்படையில், மாநில அரசுகளின் வரி வருவாய் உயர்வு விகிதம், ஜி.எஸ்.டிக்கு முன்பு 0.72ஆக இருந்து, தற்போது 1.22ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மாநில எல்லைகளில்

அமைக்கப்பட்டிருந்த சுங்க சாவடிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதங்களும், டீசல் செலவுகளுக்கும் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டியினால் ஏற்பட்டுள்ள நன்மைகள்

பாக்கெட் பால், டீ தூள்,

பால் பவுடர், சர்க்கரை,

சமையல் எண்ணெய்கள்,

மசாலா பொருட்கள்,

2017 வரை 10% வரி

2017 ஜூலைக்கு பிறகு

6% - 10% வரை

ஜி.எஸ்.டி வரி விதிப்பு

தலைக்கு தேய்க்கும்

எண்ணெய், பற்பசை,

சோப்பு, டிடெர்ஜென்ட்

வாசனை திரவியங்கள்,

2017 வரை 28% வரி

2017 ஜூலைக்கு பிறகு

18% ஆக ஜி.எஸ்.டி,

வரி சுமை குறைப்பு

கிரைண்டர், மிக்ஸி,

பிரிஜ், வேக்கியும் கிளீனர்,

27 இஞ்ச் தொலைக்காட்சி

பெட்டி, வாஷிங் மெஷின்

2017 வரை 31.5% வரி

2017 ஜூலைக்கு பிறகு

12% ஜி.எஸ்.டி,

வரி சுமை குறைப்பு

ஜி.டி.பி அடிப்படையில்,

மாநிலங்களின் வரி வருவாய்

ஜி.எஸ்.டிக்கு முன்பு 0.72

தற்போது 1.22ஆக உயர்வு



Next Story

மேலும் செய்திகள்