"உதயநிதி அமைச்சராவதால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை" - நத்தம் விஸ்வநாதன் கருத்து

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தமிழக மக்களுக்கு எந்த வித பயனும் இல்லை என அதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அதிமுக நகர கழகம் சார்பில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய நத்தம் விஸ்வநாதன், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளது அவரது குடும்பத்திற்கு மட்டுமே நல்லது எனத் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com