விரட்டி கொட்டிய விஷத் தேனீக்கள் - பதறியடித்து ஓடிய மக்கள்

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே விஷத்தேனீக்கள் கொட்டியதால் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காரத்தொழுவு கிராமத்தில் மதியவேளையில் எங்கிருந்தோ வந்த விஷத்தேனீக்கள், சாலையில் சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்குள் புகுந்து தேனீக்கள் கொட்டியதால், ஊழியர்களும், பெட்ரோல் நிரப்ப வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர். இரு சக்கர வாகனத்தில் குழந்தையுடன் வந்த கணவன், மனைவியை தேனீ கூட்டம் சுற்றி வளைத்து கொட்டியதில், இருவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் குழந்தையைக் காப்பாற்றினர். கணவன், மனைவி இருவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com