தாடியா? இண்டர்னல் மார்க்கா? எச்சரித்த ஆசிரியர் - அனைவரையும் வாய்பிளக்க வைத்த மாணவர்கள்

x

ஆரணி டவுன் கோட்டை மைதானம் அருகேயுள்ள சுப்பிரமணி சாஸ்திரியர் மேல்நிலை பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.

அப்போது ஆசிரியர்கள், தாடியுடன் பள்ளிக்கு வந்தால் செய்முறை தேர்வில் இண்டர்னல் மதிப்பெண் கிடைக்காது என எச்சரித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், ஒருவருக்கு ஒருவர் சேவிங் செய்தனர்.

பின்னர் அவர்கள் பள்ளிக்கு திரும்பினர்.

பள்ளி மாணவர்கள் சீருடையுடன் ஒருவருக்கு ஒருவர் சேவிங் செய்துகொண்டதை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்