B.E-க்கு குறையும் மவுசு - அடித்து தூக்கும் B.COM .. | College | Students

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. சென்னை மாநிலக் கல்லூரியில் பிகாம் ஜெனரல், பிகாம் கார்ப்பரேட் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 150 இடங்களுக்கு 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். கடலூர், தேனி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த கிராம பின்னணி கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com