அதிவேகமாக வந்த பேருந்து... தூக்கி வீசப்பட்ட பேரிகேட் - பரபரப்பு வீடியோ காட்சி

x

நெல்லை, சேரன்மகாதேவி பகுதியில் வேகமாக வந்த அரசு பேருந்து உரசி, தடுப்பு பலகை தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி வழியாக அம்பை செல்லும் சாலைகள், விரிவாக்க பணிகள் காரணமாக குண்டும், குழியுமாக உள்ளன.

இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்க தடுப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அரசு அதிவிரைவு பேருந்துகள், அதிக வேகத்துடன் செல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வேகமாக வந்த பேருந்து உரசியதில், தடுப்பு பலகை தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்