குழந்தைகளின் மனம் கவர்ந்த பார்பி பொம்மை எவ்வாறு உருவாக்கப்பட்டது?

x
  • அமெரிக்காவைச் சேர்ந்த மேட்டெல் என்ற பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனம், 1959இல் பார்பி என்ற நவநாகரீக பொம்மையை தயாரித்து, விற்பனை செய்யத் தொடங்கியது.
  • மேட்டெல் நிறுவனர்களில் ஒருவரான ரூத் ஹாண்டலர் என்ற பெண்மணி இந்த பொம்மையை வடிவமைத்தார்.
  • தனது இளம் மகள், காகித பொம்மைகளுடன் விளைவாடுவதை கவனித்த ரூத், குழந்தை வடிவம் கொண்ட பொம்மைகளை தன் மகள் பெரியவர்களாக பாவிப்பதை உணர்ந்தார்.
  • அன்று உருவாக்கப்பட்ட பொம்மைகள் அனைத்தும் குழந்தைகளின் வடிவம் கொண்டிருந்தன.
  • பருவ வயதுடை பெண்ணின் உருவம் கொண்ட பொம்மை ஒன்றை வடிவமைக்கலாம் என்று அவரின் கணவர் கென்னத் மற்றும் மேட்டெல் நிறுவன இயக்குனர்களிடம் ரூத் ஆலோசனை கூறினார்.
  • ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை.
  • 1956-ல் தன் குழுந்தை பார்பரா மற்றும் கணவர் கென்னத்துடன், ஐரோபாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார் ரூத்.
  • அங்கு பில்ட் லில்லி என்ற பெண் வடிவம் கொண்ட ஜெர்மன் பொம்மை ஒன்றை ஒரு விற்பனையகத்தில் பார்த்தார்.
  • மூன்று லில்லி பொம்மைகளை வாங்கிக் கொண்டு அமெரிக்கா திரும்பினார்.
  • அந்த ஜெர்மன் பொம்மையை அடிப்படையாக வைத்து, ஒரு அழகிய டீன் ஏஜ் பெண்ணின் உருவ பொம்மை ஒன்றை, ஜாக் ரயன் என்ற வடிவமைப்பாளரிடன் உதவியுடன், ரூத் ஹாண்டலர் வடிவமைத்தார்.
  • மேட்டெல் நிறுவனம் இதை தயாரித்து, 1959இல் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதெச பொம்மை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
  • அன்று தொடங்கிய பார்பியின் பயணம், படிப்படியாக வளர்ந்து, உலகெங்குமுள்ள குழந்தைகளின் ஃபேவரெட் (Favourite) ஆனது.
  • இதுவரை மொத்தம் 100 கோடி பார்பி பொம்மைகளை மேட்டெல் நிறுவனம் உலகெங்கும் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்