வங்கியில் ரூ.87 லட்சம் மோசடி சிக்கிய முன்னாள் மேலாளர்

x

திருச்சியில், போலி ஆவணங்களை தயாரித்து, வங்கியில் 87 ரூபாய் லட்சம் மோசடி செய்த முன்னாள் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த சண்முகராஜா என்பவர், திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில், மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் பணியாற்றிய காலத்தின்போது, போலியான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்து, பணம் மற்றும் தங்க நகைக்கடன் மூலமாக 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்