"கஸ்டமர் துணிவு பார்த்திருப்பாரோ..?" வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நபரின் கடை முன்பு பேங்க் மேனேஜர் தர்ணா

விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த அருணகிரி என்பவர், கச்சேரி தெருவில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. இதுவரை, வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் ஆன நிலையில், வட்டி தவணை 10 லட்சம் மட்டுமே செலுத்தியதாக கூறப்படுகிறது. வட்டி தொகையை செலுத்த கோரி, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பணம் கட்ட முடியாது என, அருணகிரி கூறியதாக தெரிகிறது. இதனால், பணம் கேட்க வந்த இந்தியன் வங்கி மேலாளர் ஏமன் குமார், அருணகிரியின் கடை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com