வங்கி ஊழியரின் பலே ஐடியா - நூதன முறையில் ரூ.42 லட்சம் மோசடி

x

கோபிசெட்டிபாளையம் அருகே, வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகையை அடகு வைத்து சுமார் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்களில் பலரும் தொழில் செய்வதற்காக நகையை அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம். இந்த நிலையில் வங்கி ஊழியர் அங்கமுத்து என்பவர், வங்கியில் பணிபுரிவதால் தன்னால் நகைகளை அடகு வைக்க முடியாது எனக்கூறி, வாடிக்கையாளர்கள் 10 பேரிடம் தன்னிடம் உள்ள நகைகளை அடகு வைத்து தருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் 41 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை, வங்கியில் கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை பரிசோதனை செய்தபோது, அதில் 10 வாடிக்கையாளர்கள் அடகு வைத்து இருந்த நகை போலி நகை என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அடகு வைக்க அங்கமுத்து கொடுத்த நகை என தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் தலைமறைவான அங்கமுத்துவை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்