வங்கி ஊழியரை தாக்கி பணம் பறிப்பு...புகாரை ஏற்க அலைகழித்த இரண்டு காவல் நிலையம் - மெரினாவில் நடந்த சம்பவம்

x

வங்கி ஊழியரை தாக்கி பணம் பறிப்பு...புகாரை ஏற்க அலைகழித்த இரண்டு காவல் நிலையம் - மெரினாவில் நடந்த சம்பவம்

சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். வங்கி உதவி மேலாளரான இவர், மெரினா சர்வீஸ் சாலையில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 3 பேர், ஹேமச்சந்திரனை கத்தியால் தாக்கி, 500 ரூபாய் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதுதொடர்பாக, ஹேமச்சந்திரன், புகார் அழிக்க சென்ற நிலையில், காவல் எல்லை பிரச்சினையால், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கும், மெரினா காவல் நிலையத்திற்கும் மாறி மாறி அலைகழித்துள்ளனர். இறுதியாக வழக்குபதிந்த மெரினா போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்