#BREAKING || வங்கிக் கணக்கில் பிடித்தம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | bank | high court

x

கடன் தவணையை, ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பிய கடிதத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து கடன் தவணைத் தொகையை பிடித்தம் செய்து, மாதந்தோறும் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்றும், இதற்காக தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்தின் கீழ் போக்குவரத்துக்கழகத்துடன், கூட்டுறவு சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், மாநகர போக்குவரத்துக் கழகம், இந்த தவணை தொகையை முறையாக ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தும் செய்து வழங்குவது இல்லை என்பதால், நவம்பர் முதல் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக தவணை தொகையை எடுக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் கடந்த அக்டோபர் கடிதம் அனுப்பியது.

கூட்டுறவு சட்ட ஒப்பந்தத்தின்படி, தவணை தொகையை போக்குவரத்து கழகம் தான் பிடித்தம் செய்து தர வேண்டும் எனவும், கடித்தை ரத்து செய்ய வேண்டும் என மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் சிக்கன நாணய மற்றம் கடன் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அஸ்கர் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மாநகர போக்குவரத்து கழகத்தின் கடிதத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரத்துக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்