பெங்களூரில் வீடு வாடகைக்கு பாக்குறீங்களா..?.. "அப்போ போச்சி போங்க..!" - உங்களுக்கு ஒரு ஷாக் தகவல்!

x
  • இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவில், கடந்த ஒரு ஆண்டில் வீட்டு வாடகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன.
  • கர்நாடாக தலைநகரான பெங்களூரூவில் ஐ.டி துறை, எலக்ட்ரானிக்ஸ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
  • கொரோனா பாதிப்புகளின் போது, சரிந்திருந்த வீட்டு வாடகை, தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.
  • வீடுகள், ஃப்ளாட்களின் சந்தை மதிப்பில் வீட்டு வாடகையின் விகிதம் இந்திய நகரங்களில் பெங்களூருவில் அதிகபட்சமாக உள்ளது.
  • வீடுகளின் விலை மதிப்பில் வீட்டு வாடகை 4 சதவீதமாக உள்ளது. மும்பையில் இது 3.8 சதவீதமாகவும், டெல்லி குர்கிராமில் 3.75 சதவீதமாகவும் பூனேவில் 3.5 சதவீதமாகவும் உள்ளன.
  • பெங்களூருவின் மத்திய பகுதியில் காலியாக உள்ள ஃபிளாட்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதால், அவற்றிற்கான வாடகை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • இரண்டு படுக்கை அறை கொண்ட பிளாட்டின் வாடகை 50 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்