ஜஸ்ட் மிஸ்..பைக்கோட போச்சு..! 1 நொடியில் எமனை பார்த்துட்டு வந்த இளைஞர் - வேகமாக வந்த லாரி

x

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தும்கூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்றிருந்த இருசக்கர வாகனம் மீது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் வருவதை பார்த்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி விலகியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதேபோல், சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த தடுப்பு மீது மோதியதில் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்