திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து.. தூங்கி கொண்டிருந்த நடத்துனர் கருகி பலி - துயரத்தின் உச்சத்தை தொட்ட கோர சம்பவம்

x
  • பெங்களூருவில் தீடீரென பேருந்து தீப்பிடித்து எறிந்ததில், பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த நடத்துனர் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • பெங்களூருவின் லிங்க தீரணஹல்லி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப்பேருந்தில் ஓட்டுநரும், நடத்துனரும் இரவில் தூங்கியுள்ளனர்.
  • இதில், பேருந்து ஓட்டுநர் கொசுத்தொல்லை காரணமாக, அதிகாலையில் பேருந்தில் இருந்து இறங்கி அருகில் உள்ள அறையில் தூங்கசென்றதாக கூறப்படுகிறது.
  • அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து எறிந்த நிலையில், பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த நடத்துனர் முத்தையா சாமி தீயில் சிக்கி பலியானார்.
  • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்து 80 சதவீத தீக்காயங்களுடன் நடத்துனரை சடலமாக மீட்டனர்.
  • இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்