இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவில் டிக்-டாக்கிற்குத் தடை?

x

டிக்டாக்கை தடை செய்வதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீன சமூக ஊடக தளமான TikTok ஐ அமெரிக்காவில் செயல்படுவதைத் தடைசெய்வதற்கான மசோதாவை, எம்.பி மார்கோ ரூபியோ அறிமுகப்படுத்தினார். அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைக் கல்லாகர் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிரதிநிதிகள் சபையில் துணைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர். தேர்தல்களில் டிக்டாக்கின் தலையீடு உள்ளதாக தெரிவித்த ரூபியோ, சீன நிறுவனமான டிக்டாக்-உடன் பேச்சிவார்த்தைகளில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும், இது டிக் டாக்கை தடை செய்ய வேண்டிய நேரம் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்