நாளை மது விற்பனைக்கு தடை - தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

x

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். அன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். மது பானம் விற்பனை, மது பானத்தை கடத்துதல், அவற்றை பதுக்கி வைத்தல் போன்றவை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்