கன்னட படங்களில் ராஷ்மிகாவிற்கு தடையா? | Rashmika Mandanna

x

கன்னட படங்களில் ராஷ்மிகா மந்தனாவிற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

தனியார் நேர்காணலில் பேசிய ராஷ்மிகா மந்தனா, திரையுலகில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்த படம் கிர்க் பார்ட்டி என தெரிவித்தார்.

ஆனால் இதுபற்றி பேசும் போது, அந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனும், தனது முன்னாள் காதலருமான ரக்‌ஷித் செட்டி பெயரை குறிப்பிடாமல் அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதனை மேற்கோள்காட்டி ராஷ்மிகாவை கன்னட படங்களில் தடை செய்யுங்கள் என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்