பாமக பிரமுகர் துள்ள துடிக்க வெட்டிக்கொலை... துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளி....

x

நள்ளிரவை கிழித்தெரிந்த பொதுமக்களின் ஆக்ரோஷ குரலால் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையே ஸ்தம்பித்து போனது.

ஆண், பெண் என ஒருவரும் உறங்காமல் சாலையை ஆக்கிரமித்து மறியலில் ஈடுபட காரணம், ஸ்டரச்சரில் கிடக்கும் இந்த சடலம்.

குற்றவாளியை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கப்போவதில்லை என்று ஒலித்திருக்கிறது இந்த உக்கிரமான முழக்கங்கள்.

கொல்லப்பட்டவர் செங்கல்பட்டு மணிகுண்டு பகுதியை சேர்ந்த நாகராஜ். 47 வயதான இவர் செங்கல்பட்டு பாமக நகர செயலாளராக பதவி வகித்து வந்திருக்கிறார். அதே பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்த நாகராஜுக்கு திருமணமாகி இரண்டு ஆண் ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் கடைக்கு சென்ற நாகராஜ் இப்படி வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

தகவல் அறிந்த போலீசார், நாகராஜின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.

அரசியல் காரணத்தினால் நாகராஜ் கொல்லப்பட்டாரா..? அல்லது முன்பகையா....? தொழிற்போட்டியா...? என பல்வேறு கோணங்களில் விசாரனை விரிந்திருக்கிறது.

அப்போது தான் புலிப்பாக்கம் பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனே களத்தில் இறங்கி குற்றவாளிகளை சுற்றி வலைத்திருக்கிறார்கள்.

இதனை அறிந்த கொலையாளிகள் போலீசாரின் மீது கத்தியால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது தான் தற்காப்புக்காக எதிர் தாக்குதல் நடத்தி, அஜய் என்ற வாலிபரை போலீசார் சுட்டுபிடித்திருக்கிறார்கள்.

குண்டடி பட்ட காயத்திற்கான சிகிச்சை முடிந்ததும் அஜயிடம் போலீசார் விசாரனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது தான் நடந்த கொலைக்கான பின்னணியில் ஒரு காதல் விவகாரம் இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆம்....17 வயதான நாகராஜின் மகள், செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை காதலித்து, கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

சூர்யா ஏரியாவில் வளர்ந்து வரும் ஒரு பிரபல ரவுடி. கஞ்சா விற்பனை, கொலை முயற்சி என இளம் பிராயத்திலேயே கேஸ் வாங்கி கொண்டு சிறைப்பறவையாக சுற்றி வந்திருக்கிறார்.

அருமை பெருமையாய் வளர்த்த மகளை, பாழுங்கிணற்றில் தள்ளி விட மனமில்லாத நாகராஜ், தனது மகளை கடத்தி சென்றதாக சூர்யாவின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், 2 மாதத்திற்கு பிறகு சூர்யாவையும், 17 வயது சிறுமியையும் தேடி பிடித்திருக்கிறார்கள்.

சிறுமியை கண்டித்து நாகராஜுடன் அனுப்பி வைத்து விட்டு, சூர்யாவையும் பெண்ணை கடத்த துணையாக இருந்த நண்பர்களையும் போக்சோ வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர்.

காதலை பிரித்தது மட்டுமல்லாமல், சிறையிலும் தள்ளி அவமானபடுத்திய நாகராஜை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி இருக்கிறது சூர்யா அன்ட் கோ.

சமீபத்தில் பிணையில் வெளிவந்தவர்கள், நாகராஜுக்கு பல நாளாக ஸ்கெட்ச் போட்டு கதையை முடித்தது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஏற்கனவே அஜயை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள சூர்யாவையும் அவரின் கூட்டாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அஜயை ஏற்கனவே கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்