தீபாவளி சீட்டு நடத்தி ரூ.27 கோடி மோசடி செய்த பலே குடும்பம்

x

திருவள்ளுவர் அருகே, தீபாவளி சீட்டு நடத்தி, 27 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கணவன், மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தாமரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து 27 கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில், அதனை திருப்பித் தராமல், ஜோதியின் குடும்பம் தலைமறைவானது. இதுதொடர்பான புகாரைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஜோதி, அவரது மனைவி சரண்யா, சகோதரர் பிரபு உட்பட 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்