தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்

x

தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, ஐநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர். மேளதாளத்துடன் ஒயிலாட்டம் ஆடியபடி பால்குடம் எடுத்து வந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்