தேவாலயத்திற்கு வந்த சிறுமிகளிடம் பாதர் செய்த பகீர் காரியம் - ராமேஸ்வரத்தில் பரபரப்பு

x

ராமேஸ்வரம் அருகே தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய வந்த சிறுமிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்த பங்குத்தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் ஜான் ராபர்ட்.

இவர் மண்டபம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தார்.

இதனிடையே ஜான்ராபர்ட் பிரார்த்தனைக்கு வந்த 3 சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்தது.

இதன்படி, விசாரணையை தொடங்கிய குழந்தைகள் நல அதிகாரிகள், பங்குத்தந்தை ஜான் ராபர்ட் மீது மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ஜான் ராபர்ட்டை கைது செய்த போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்