யானையை கொடூரமாக தாங்கிய பாகன் - வலியால் துடிதுடித்த காட்சி

x

கேரளாவில் பெண் யானையின் தலையில், பாகன் பயங்கரமாக தாக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கேரளா மாநிலம் திருவம்பாடி தேவசத்திற்கு சொந்தமான லட்சுமி எனும் பெண்யானை உள்ளது.

ஆற்றில் குளிக்க வைத்துவிட்டு கோயிலுக்கு யானையை பாகன் அழைத்து வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, யானை நடக்கும் வேகம் குறைந்ததால், பாகன் தனது கையில் வைத்திருந்த தோட்டியை வைத்து யானையின் தலையிலேயே பயங்கரமாக தாக்கியுள்ளார்.

யானை வலி தாங்க முடியாமல் சத்தமிடுவதை, சிலர் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், பாகன் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்