படுகர் தின விழா கொண்டாட்டம் - பாரம்பரிய இசைக்கு அமைச்சர் கா.ராமச்சந்திரன் நடனம்!

x

உதகையில் நடைபெற்ற படுகர் தின விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பாரம்பரிய படுகர் இசைக்கு நடனம் ஆடினார். உதகையில் உள்ள இளம் படுகர் நல சங்க கட்டிடத்தில் படுகர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, படுகர் கொடியை ஏற்றி வைத்து, படுகர் சமுதாய தலைவர்கள், பிரதிநிதிகளுடன் இணைந்து நடனம் ஆடினார்.


Next Story

மேலும் செய்திகள்