பாக்தாத்தில் குண்டுவெடிப்பு.. 10 பேர் உடல் சிதறி பலி | attack | death | bağdat

x

பாக்தாத்தில் குண்டுவெடிப்பு.. 10 பேர் உடல் சிதறி பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்தாத்தில் உள்ள கால்பந்து மைதானம் மற்றும் ஓட்டலுக்கு அருகே உள்ள வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது... இதில் அருகில் இருந்த எரிவாயு டேங்கரும் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் அருகிலுள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஆவர். இது குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருவதாக ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்