சபரிமலை பிரசாதத்தில் தரமற்ற ஏலக்காய் - பக்தர்கள் அதிர்ச்சி | sabarimala | Cardamom | thanthi tv

x

சபரிமலை அரவணையில் பயன்படுத்தப்படும் ஏலக்காயை, உணவு பாதுகாப்பு ஆணையத்தின் கொச்சி ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என ஐயப்பா மசாலா நிறுவனம் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவின் அடிப்படையில் கேரளா உயர்நீதிமன்ற தேவசம் பெஞ்ச் உத்தரவுப்படி சபரிமலை செயல் அலுவலர், அரவணை தயாரிக்க பயன்படுத்தும் ஏலக்காய் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆய்வகத்திற்கு அனுப்பினார். அங்கு நடந்த பரிசோதனையில் ஏலக்கய் தரமில்லை எனவும், உணவுப் பாதுகாப்புத் தரத்தின்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து ஏலக்காயில் கலந்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சபரிமலை அரவணையில் பயன்படுத்தப்படும் ஏலக்காயை உணவு பாதுகாப்பு ஆணையத்தின் கொச்சி ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆய்வு அறிக்கையை திங்கள்கிழமை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்